பாரதியார் பல்கலைக்கழகத்தில் பனியாற்றி வரும் 45 ஆசிரியர்கள் CAS (Career Advancement Scheme) திட்டம் மூலம் பதவி உயர்விற்கு நேர்கானலில் கலந்துகொண்டு, பதவி உயர்வு முடிவுகள் எடுக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன பின்பும் உத்தரவுகள் வழங்காமல் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தி வருகிறது.
UGC 11-வது திட்ட காலத்தில், தற்காலிகமாக பணியில் சேர்ந்து, 12-வது திட்ட காலத்தில் பணியில் தொடர்ந்து வரும் ஆசிரியர்களின் மீது SC/ST சங்கம் தொடர்ந்த வழக்கில், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பனிநீக்க உத்தரவு பிறப்பித்தனர். இருந்தும் அவர்கள் பணியில் தொடர்வதால், அவர்கள் மீது தணிக்கை துறையின் ஆட்சேபனை மற்றும் DVAC/நீதிமன்ற வழக்குகள் நிலுவயில் உள்ளன. இதற்கிடையில் UGC 11-வது திட்ட காலத்தில் தற்காலிகமாக பணியில் சேர்ந்து 12-வது திட்ட காலத்தில் பணியில் தொடர்ந்து வரும் ஆசிரியர்கள், தங்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மற்ற ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு தடை பெற்றனர்.
இந்த நிலையில் 12.10.2022 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பில் அவர்கள் 2 வாரங்களுக்குள் தனிக்கை துறையில் ஆவணங்களை சமர்பித்து, அதன் முடிவின்படி அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கும் நேர்கானல் நடத்தியபிறகே மற்றவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் கூறி வருகிறது.
இதனால் 2005ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு ஆணையை நிறுத்தி வைத்திருப்பதை எதிர்த்து ஆசிரியர்கள் பதிவாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.