கோவை மே 28 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 48) இவருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு கோவை புலியகுளத்தை சேர்ந்த பழனிச்சாமி ( வயது 60 )என்பவர் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தின இரவு 11:15 மணி அளவில் அசோக் குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இரவு 10 மணியளவில் தோட்டத்தில் 2 பேர் புகுந்தனர். தன்னை மிரட்டி ரூ.3 ஆயிரம் பறித்தனர் .இதனால் ஆத்திரமடைந்து அதில் ஒருவரை இரும்பு குழாயால் அடித்தேன் .அவர் இறந்துவிட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார் என்று கூறினார் .இதை கேட்டு அதிர்ச்சடைந்த அசோக்குமார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு முதியவர்தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார் .அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார் .அதில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் அந்த முதியவர் தோட்டத்துக்குள் வந்ததும் ,தடுத்தும் கேட்காமல் முன்னேறி சென்றதால் திருடன் என்று நினைத்து இரும்பு குழாயால் அவரை பழனிச்சாமி தாக்கியதும், அதனால் அவர் உயிரிழந்ததும், பதற்றத்தில் அசோக்குமாரிடம் பொய் கூறியதும் தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தியதில் இறந்தது கல்லார் பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர் என்பதுதெரியவந்தது.இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
திருடன் என நினைத்து பிச்சைக்காரர் அடித்துக் கொலை . காவலாளி கைது.
