கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையாசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மழைகாலங்களில் ஆறுகளில் ஏற்படும் திடீர் வெள்ளநீரில் சிக்கிக் கொண்டவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது, மழைகாலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான செய்முறை பயிற்சியுடன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் வால்பாறை தீயணைப்புதுறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை அரசு பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு..!





