சென்னை: கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும், என்று அதிமுக பொதுச் ...

சாட்னா: உலக அரங்கில் இந்தியா புதிய உச்சங்களை தொட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சாட்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது. மகான்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதமே இதற்குக் காரணம். ...

சனாதனத்துக்கு எதிராக பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க., எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில இந்து முன்னணி நிர்வாகிகள் கோ வாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த ...

கோவை அருகே உள்ள கோவில் மேடு தடாகம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தாமோதரன், இவரது மகன் கண்ணன் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தடாகம் ரோடு சிவகாமி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். ...

நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் வீட்டிற்குள் புகுந்த உடும்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மேலகோவில்பட்டி சாலையில் செளபாக்யா நகரில் காந்திராஜன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரி ஊழியரான இவரது வீட்டிற்குள், வாஷிங் மெஷின் அருகே ஒரு அரிய வகை விலங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காந்திராஜன் ...

கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவைபோலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.2-வதுநாளாக நேற்று நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 ...

பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்ரா 2.0, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் செப்டம்பர் 7ம் தேதி ...

திருநெல்வேலி: திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியலின இளைஞர்கள் 2 பேருக்கு நிகழ்ந்த வன்கொடுமை தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நேற்று விசாரணை மேற்கொண்டது. திருநெல்வேலி மணிமூர்த்திஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் இனத் இளைஞர்கள் மாரியப்பன், மனோஜ் குமார் ஆகியோரை கடந்த 30- ம் தேதி மது அருந்தி விட்டு நின்ற கும்பல் தாக்கியது. அவர்கள் இருவரிடம் ...

கரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பை வெளியிடுவேன் என கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் அவர் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் அண்ணாமலை நான் பெண் என்பதால் பிழைத்துக் கொண்டு போகட்டும் என அவர் விட்டு வைத்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார் என நான் ...

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ...