நடிகரும் தவெக தலைவருமான விஜய்-சங்கீாதாவின் தனிப்பட்ட விஷயத்தை அரசியல்படுத்த நான் விரும்பவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தது இன்று அது வெளியே வந்திருக்கிறது. இது குறித்து ...

கோவை சுங்கம் பகுதியில் பாம்பு பிடி வீரர்கள் இருவருக்கு,  இரு சக்கர வாகனங்கள்  வழங்கப்பட்டன. கோவை மாவட்டப் பகுதிகளில் பொது இடங்கள், தனி நபர்களின் வீடுகளில் புகும் பாம்புகளை மீட்கும் பணியில் பாம்புப் பிடி வீரர்களான அமீன், விக்னேஷ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களான இவர்கள் இருவருக்கும் பாம்புகளை விரைந்து சென்று பிடிப்பதற்குத் தேவையான இருசக்கர ...

டெல்லி: புதிய மதுபானக் கொள்கை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார். தான் நிரபராதி என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, கடந்த 2021ம் ஆண்டில் ...

2026 டி20 உலகக்கோப்பை(T20 World Cup 2026) அரையிறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இந்திய அணி மீண்டும் வலுவாக இணைந்துள்ளது. சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது, இந்திய அணிக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. இந்நிலையில், நடப்புச் சாம்பியனான இந்தியா, நேற்று நடந்த ஜிம்பாப்வே எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி மீண்டெழுந்தது. அபிஷேக் சர்மா (55) மற்றும் ...

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தாலிபன்கள் ஆட்சி நடைபெறும் ஆஃப்கானிஸ்தான் மீது நேரடியான போரை இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் ...

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இருதரப்புக்கும் இடையே விரைவில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் ...

ரியாத்: நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நம் நாட்டில் இருந்து அனுப்பப்படும் கோழி, முட்டை உள்ளிட்டவற்றுக்கு சவுதி அரேபியா திடீரென்று தடை விதித்துள்ளது. இதனை சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் உறுதி செய்துள்ளது. ...

நாட்டில் உள்ள அனைத்து பொது பூங்காக்களிலும் ரேடியோக்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா நகரம், வித்யாநகரில் உள்ள அகில இந்திய வானொலி பத்ராவதி மையத்தின் டிரான்ஸ்மீட்டர் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எல். முருகன் ...

அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்தில் டேப் ரிக்காா்டா், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பேருந்து ஓட்டுநா்கள், பேருந்துகளை ...

தமிழகத்தில் தனியாா் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை உயா்ந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டா் ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (புல் க்ரீம் மில்க்) ரூ.78-ஆகவும், ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீா் சிறப்பு பால் (டீ ஸ்பெஷல் மில்க்) லிட்டா் ரூ.70-ஆகவும், ரூ.66-க்கு விற்பனையான நிலைப்படுத்தப்பட்ட பால் ...