நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த போலீஸ்காரர் முத்துவேல்.இவர் நேற்று கோவை காந்திபுரத்தில் இருந்து ஈஷா மையத்துக்கு செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ்சில் கூட்டம்அதிகமாக இருந்தது. நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக ஜேப்படி செய்தார். இதை அறிந்த போலீஸ்காரர் முத்துவேல் பஸ் கண்டக்டரிடம்பஸ்சை நிறுத்தும்படி ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 44) தொழில் அதிபர். இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 8பேர் கொண்ட கும்பல் குணசேகரனையும் அவரது டிரைவர் நாராயணனையும் மிரட்டி சென்னை பதிவு எண் கொண்ட கார்களில் கடத்திச் சென்றனர். அப்போது குணசேகரன் அவர்களிடம் நீங்கள் ...

காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.ரகு மற்றும் அசேன் ஆகிய ...

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசை மங்கை திருக்கோவில் மங்களீஸ்வரர் மங்களேஸ்வரி திருக்கல்யாண மாலை சூலூர் வைத்தீஸ்வரன் ஆலய மார்கழி கமிட்டி குழு அன்பர்கள் சார்பில் உத்திரகோசமங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு சூலூர் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் திரளாக திருக்கல்யாணம் மாலையை திருக்கோவில் வளமாக கொண்டு வந்து வைத்தீஸ்வரனுக்கும் தையல்நாயகி அம்மனுக்கும் ...

நல்ல தரமான, ஆரோக்கியமான உணவு வழங்கும் நிலையங்களை ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்து சான்றிதழ்களை வழங்குவது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) தலைமையிலான ஈட் ரைட் நிலையம் இயக்கத்தின் ஒரு முன்முயற்சியாகும். இந்த முயற்சியின் கீழ், ரயில்வே நிலையங்களில் சுகாதாரமான, சத்தான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வது முதன்மை நோக்கமாகும். ...

திருச்சியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது 2015-ல் மழை வெள்ளம் தாக்கியபோது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால், இம்முறை பேய் மழை பெய்த போதும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கைகள் எடுத்ததால் சென்னையில் பெருமளவு பாதிப்புகள் குறைந்துள்ளன. இரண்டாவது முறையாக தென் மாவட்டங்களை மழை வெள்ளம் ...

குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில், சிறார் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். திருச்சி கீழபுலிவார்டில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் தற்பொழுது 11 சிறார்கள் ...

கோவை டிச 26கோவை மாவட்டம்சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களும், தமிழகத்தில் உள்ள பல மாவட்டத் தொழிலாளர்களும் சூலூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.மேலும் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு ...

முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், jct பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா துவங்குவதற்கு முன்பாக ஜமாப், ...

உலகத் தமிழ் நெறிக் கழகம் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 227-வது நினைவு நாள் ,திருவள்ளுவர் நாட்காட்டி வெளியீட்டு விழா கோவை அண்ணாமலையாரங்கில் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. உலகத் தமிழ் நெறிக் கழக செயலாளர் சொ. சிவலிங்கம், துணைத் தலைவர் குரு பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...