மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமூல் காங்கிரஸ் இடையிலான மோதலால், ‘இந்தியா கூட்டணி’க்கு முதல் வேட்டு விழுந்திருக்கிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர அனுமதிக்கக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில், சிறிதும் பெரிதுமாக சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா கூட்டணி’ உருவானது. பாட்னா, பெங்களூர், மும்பை வரிசையில் அண்மையில் டெல்லியில் கூடி, தங்களது நோக்கங்களை ...
மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்றுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. கால்நடைத்துறை சார்பில் வெளியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காளைகளை பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாடு திமில் தெரியும் வகையில் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் ...
சென்னை: தமிழகத்தில் ஜன.,19 முதல் 31 வரை நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்க பிரதமர் மோடியை, அமைச்சர் உதயநிதி நாளை (ஜன.,4) சந்திக்க உள்ளார்.அரசின் திட்டத்தின் கீழ் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் ...
உ.பி முதல்வர் யோகி: “அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வருவோர் மறக்க முடியாத அனுபவம் பெறுவர்”…
லக்னோ: ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கும், அதைத் தொடர்ந்தும் அயோத்தி வருபவர்களுக்கு அது மறக்க முடியாத மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ...
ஜப்பான், சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதன் காரணமாகக் கடந்த 3 நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை முதல் ராமேஸ்வரம் ...
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தையடுத்து நிறுவனம் தமிழ்நாடு அரசால் மூடப்பட்டது. இந்நிலையில், ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜன.2) மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த மாதம் 4-வது வாரத்தில் ...
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில், இன்று கேரளா செல்கிறார். லட்சத்தீவில் இருந்து கேரளாவின் திருச்சூருக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று தரையிறங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்,. திருச்சியில் நேற்று நடந்த விழாவில் ...
நேற்று(ஜன.02) சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல் CMK Projects Pvt Ltd நிறுவனத்திலும், அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒப்பந்தம் எடுத்து கட்டி கொடுத்துள்ளது. ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு ...
முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ...
பெங்களூரு: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற வுள்ளது. அக்கோயிலின் கருவறையில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலைகளை வடித்தனர். இதில் சிறந்த சிலையை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இக்கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம ...













