கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு தொழிற்சங்கம் தொடர்பான பதிவுகளை பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் அலுவலகத்தில் புகுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் ...

கோவை பீளமேடு சித்ரா விமான நிலைய ரோட்டில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சென்றார். அங்கிருந்த ஓட்டல் சப்ளையரிடம் “ஆம்லெட்” வேண்டும் என்று கேட்டார். அவர் ஓட்டல் மூடப்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சப்ளையர் இளங்கோவை தாக்கி அங்கிருந்த மேஜை நாற்காலிகளை உடைத்து ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர்பகுதியில் நடிகர் விஜயகாந்த் தோட்டம்உள்ளது .இதன் அருகே பொங்கல் பண்டிகைக்காக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ...

மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அமுல் ( வயது 33 ) இவர் துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் உள்ள மத்திய ஆயுதப்படை (சி. ஆர். பி.எப்) பயிற்சி முகாமில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று அவர் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.ஆர்.பி.எப் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ...

தேனிமாவட்டம், ஊஞ்சம்பட்டி, ரத்தினம் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45) இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் ...

கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் பால வெங்கடேஷ் ( வயது 50 )நகை வியாபாரி. இவருக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் பணம் – கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பால வெங்கடேஷ் மீது முத்துக்குமார் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பால வெங்கடேஷ் ...

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 40 வயது பயணி ஒருவர் அரசு பஸ்சில் (1 சி) பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் பஸ்சினுள் மயங்கி விழுந்தார். இதையடுத்து கண்டக்டர் அந்த பயணியை நடுவழியில் இறக்கி சாலையோரம் படுக்க வைத்து விட்டு பஸ் புறப்பட்டு சென்றது . இதுகுறித்து ...

தொழில் நிறுவனங்கள் கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில், வியாபாரம் செய்வதற்காகவும், பணிக்காகவும், படிப்பதற்காகவும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி வருகின்றனர். அவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து இன்று ( திங்கள்கிழமை) பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்களும் செயல்பட தொடங்கின. இதையடுத்து சொந்த ஊருக்கு சென்றிருந்தவர்கள் ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக மருதமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது .நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று மருதமலை முருகன் கோவில் அடிவார பகுதியில் புகுந்தது. ...

கோவை மாவட்டம் காரமடை அருகே கோட தாசனூரை சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 60) இவரது தோட்டத்திற்குஅந்தப் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 7 பூப்பறிக்க சென்றனர். இதை யடுத்து ரங்கராஜ் மற்றும் தொழிலாளர்கள் பூப்பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தேனீக்கள் அவர்களை கொட்டியது .இதில் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் சத்தம் கேட்டு ...