சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் நல உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு 2025-26-க்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ​​கலைஞர் மகளிர் நல உதவித்தொகை திட்டத்தின் நன்மைகள் குறித்து உறுப்பினர்கள் ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர் பகுதியில் 355 பட்டாசு கடைகளும், புறநகர் பகுதியில் 300 கடைகளும் என மொத்தம் 655 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலீசார், தீயணைப்பு துறை ,மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் உள்ள முத்து கவுண்டன் புதுரை சேர்ந்தவர் முருகேசன். சலவை தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை சேர்ந்த முத்து செல்வம் மகன் அரவிந்த் என்ற அரவிந்த் குமார் மீது ...

கோவை அம்மன் குளம், பாரதி காலனி அருகே குப்பை குவியல் கிடந்தது .அந்த குப்பையில் ஒரு பெண் குழந்தை சிசுவுடன் தொப்புள் கொடி அறுபடாத நிலையில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சந்தையில் நேற்று ஆட்டு சந்தை நடந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி சந்தைக்குஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது .இது குறித்து ஆட்டு வியாபாரிகள்கூறியதாவது:-பொள்ளாச்சி சந்தைக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்ட1000 க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ரு 2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது. இதே போல் ...

கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரின் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் சரவண சுந்தர் ...

கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 30 லட்சத்தை கடந்துள்ளது. சென்னை -டெல்லி . மும்பை பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், சார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி போன்ற வெளிநாடுகளின் நகரங்களுக்கும் நேரடி விமானங்கள் இயக்கபட்டு வருகின்றன. வெளிநாட்டு பிரிவில்கோவை – சிங்கப்பூர் இடையே ஸ்கூட் மற்றும் இண்டிகோ ஆகிய ...

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் ராஜ்.குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி கீதாஞ்சலி ( வயது 26) இவர் தனது கணவரிடம் தீபாவளிக்கு சேலை வாங்கித் தருமாறு கூறினாராம். இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் ராஜ் அவரது மனைவியை கீழே பிடித்து தள்ளி வயிற்றில் மிதித்தார். பின்னர் அவருக்கு கொலை ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, நேரு காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி உமா (வயது 41 )இவரது கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதிலிருந்து உமா மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையைவிட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று மாலையில் குனியமுத்தூர் ,மூவேந்தர் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே 2 பேர் நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது . இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். ...