டெல்லியில் மாணவர் விடுதி இடிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 5 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மற்றொருவரும் பின்னர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். இதையடுத்து இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் மருத்துவமனையில் ...
தற்போதைய உலக வரைபடத்தில் உள்ள தவறுகளைத் திருத்தி மிகத் துல்லியமான புதிய வரைபடம் வெளியிடக் கோரும் ஐ.நா. பொதுச் சபை தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. 193 நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் டோகோ நாடு முன்மொழிந்த இந்தத் தீா்மானத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ...
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 11 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம், மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது. நேபாளத்தில் கடந்த ஆக.26-ஆம் தேதி போடே கோஷி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், ...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா திம்மராயசமுத்திரம் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் மற்றும் 6 சென்ட் பரப்பளவு கொண்ட சுமார் 600 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஸ்ரீரங்கம் கோவில் சமய பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரை வாடிப்பட்டியை ...
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவது உறுதியாகி உள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், துறைகளின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும் சுமார் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, சரத்குமார், CTR நிர்மல்குமார் மற்றும் பிரபு ஆகியோரின் தற்போதைய துறைகள் மாற்றப்பட்டு, ...
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், கொளத்தூர் தொகுதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ...
சென்னையில் 15 நாளாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சென்னையில் உழைப்பவர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் ஒதுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...
கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” என தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான ...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய அதிநவீன நிர்வாக வளாகம் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தலைநகர் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய கட்டட ...
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய இடத்தில் மத்திய கிழக்கு பகுதி அமைந்துள்ளதால் இங்கு தனது ஆதிக்கத்தை செலுத்த அனைத்து வல்லரசுகளும் தீவிரம் காட்டி வந்துள்ளன. அந்த வகையில் மத்திய கிழக்கு பகுதியின் பல்வேறு நாடுகளில் நீண்ட ஆண்டுகளாக அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள பல்வேறு நாடுகளில் அமெரிக்கா ராணுவ ...













