கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோ நேற்று மாலையில் நீலி கோணாம்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர் . அவரிடம் 1,100 கிராம் கஞ்சா, நீளமான வீச்சு அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெகு சிறப்பாக விளையாடி முதல் பரிசு மற்றும் சுழல் கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். அம்மாணவர்களை ...
கோவை, பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் அவரது கடையறையில் மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரது மோட்டார் சைக்கிளை நைசாக திருடிக் கொண்டு ...
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 ...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு வடக்கி பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற மாணவர் 11 -ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வகுப்புகள் முடிந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக மாணவர்கள் அங்குள்ள கழிப்பிடம் சென்றனர். அப்போது கழிப்பிடம் அருகில் மாணவர்கள் ...
நாட்டின் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய மேலிடத் தலைவருமான அமித்ஷா, இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று நெல்லை வருகிறார் அப்போது சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார் . தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியும், ...
அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த பொதுநல மனுவில், அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூ.1000-க்கு மேல் ...
அ.தி.மு.க யார் கையில் இருக்கிறது என்றுகூட தெரியாமல் சிலர் அறியாமையால் பேசுகிறார்கள். சிலர் கட்சி ஆரம்பித்த உடனேயே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள், நாங்கள் அப்படியல்ல’ என்று த.வெ.க தலைவர் விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். மதுரை அருகே பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் ...
மதுரை: தவெக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட தொண்டர்களால் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தவெகவின் முதல் ...
மத்திய அரசு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டியை நீக்க முன்மொழிந்துள்ளது. இதனால் காப்பீட்டுத் திட்டங்கள் மலிவாகி, மக்கள் எளிதில் காப்பீட்டைப் பெற முடியும். மத்திய அரசு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க முன்மொழிவை கொண்டு வந்துள்ளது. தற்போது 18% வரி காரணமாக, ...