திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் 13 ஆயிரத்துக்கும் அதிகமான வளர்ப்புப் பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கேரள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தழக்கரா, தலவடி சம்பக்குளம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிரணம் ஆகிய இடங்களில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த 4 ஆயிரத்திற்கும் ...
மதுரை: மதுரையைச் சேர்ந்த திருமுருகன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை அருகே ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும். போதைப் பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் ...
திருச்சி: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த யூடியூபர் சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் காவலில் எடுத்து திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரித்தனர். காவல் முடிந்து நேற்று மாலை மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் சங்கர் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் ...
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், 67ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் ...
சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட மணல் குவாரிகளில் 26 மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்காக தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் குவாரிகளை ...
சென்னை: ‘பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!’என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு ...
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரியில் மற்றும் பர்லியாறு பகுதிகளில் 8 செ.மீ., எடப்பள்ளியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குன்னூர் புறநகர் பகுதியில் 6.4 செ.மீ., கின்னகொரை, பந்தலூர், தேவாலா, கோத்தகிரியில் தலா 6.4 செ.மீ மழை பதிவானது. மேட்டுப்பாளைம் – குன்னூர் ...
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம் கட்டமாக நாளை மறுநாள் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர்நேற்று மாலை துடியலூர் பன்னிமடை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1250 கிராம் கஞ்சா, 102 கிராம் உயர் ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை தெலுங்கு பாளையம் பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் அனுஸ்ரீ ( வயது 10)இவர் உடல்நல குறைவால் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஆயுர்வேதிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் படுத்திருக்கும் போது படுக்கையிலிருந்து கீழே தவறி விழுந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை எடுத்துச் சென்றனர், ...