ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் – திருச்சி ஆட்சியர் மா. பிரதீப்குமாா்!!
ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி நீராடி புத்தாடைகள் அணிந்து காவிரித்தாய்க்கு, காப்பரிசி காதோலை கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி தாயை வணங்கி புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வாா்கள். இதேபோல ஞாயிற்றுக்கிழமை ...
திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்தவா் கதிா்வேல் (60). இவா், துவாக்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாங்கிய வீட்டுமனைக்கு வரி நிா்ணயம் செய்வதற்காக துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.இந்நிலையில், ஜூலை 29-ஆம் தேதி விண்ணப்பத்தின் நிலை அறிய துவாக்குடி நகராட்சி அலுவலகத்துக்கு கதிா்வேல் சென்றாா். அப்போது நகராட்சி ஊழியா் (வரி வசூல் அலுவலா்) சௌந்தரபாண்டியன்(35) ரூ.50 ஆயிரம் ...
சென்னை: வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்களின் முதல்முறை பயண செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, 54 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் ...
நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது கடந்த மே மாதம் 5ந் தேதி நடைபெற்றது.அதன்பிறகு ரிசல்ட் வெளியானது. ரிசல்ட் வெளியான நிலையில் தான் ...
வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களை நிலச்சரிவு புரட்டிப்போட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 298 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. 4வது நாளாக மீட்புப் பணிகள் ...
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல விஞ்ஞானிகளுக்கு தடை விதித்துள்ளதாக கூறும் செய்தி தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய ...
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் முக்கிய நாடாக உள்ளது. இந்த நாட்டின் பிரதமர் பாம் பின் சின்ஹ் 3 நாள் பயணமாக, கடந்த ஜூலை 30 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் உட்பட வர்த்தக குழு ஒன்றும் வருகை புரிந்திருந்தது. ...
திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நுாலகம் அமையவுள்ள இடத்தை உதயநிதி பார்த்தார். பின் அங்கிருந்து திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சென்றார். அங்கு, 2.5 கோடி செலவில் கட்டப்படவுள்ள அங்கூரான் அறிவியல் மையம் கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45 )பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலையில் அவரது வீட்டில் குளியல் அறையில் குடிநீர் கசிவு ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது 8 அடி உயர சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் ...
கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் முரளி. இவர் 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணி செய்து வந்தார்.நேற்று இரவு காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாம்பு புகுந்துள்ளதாக நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் முரளிக்கு தகவல் அளித்துள்ளனர். அந்நிறுவனத்தின் அறையில் புகுந்த பாம்பு பிடிக்க முயலும் போது எதிர்பாராத ...













