பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து, அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க மூலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்திவரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி ...
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் அமெரிக்காவின் இரண்டு ரோட்டரி கிளப்புகள் சார்பில் 55 குழந்தைகளுக்கு 52 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டைப் ஒன் டயாபடீஸ் இன்சுலின் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் டைப் ஒன் டயாபடீஸ் எனப்படும் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்நாள் ...
கோவையில், வாழும் கலை அறக்கட்டளையின் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான “ஸ்வர தாரங்கிணி” பஜனை போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். குழந்தைகளிடையே பஜனை பாடலின் பண்டைய இந்திய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் நடைபெற்ற விழாவில், இசையின் மூலம் ஒழுக்கம், மன அமைதி, உணர்ச்சி சமநிலை ...
கோவை பீளமேட்டில் கொடிசியா அருகே தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு ஒரு ராட்சத ராட்டினத்தில் ” ஸ்கை லிப்ட் ” பலர் ஏறி உட்கார்ந்து இருந்தனர். அது சுழலும் போது திடீரென்று பழுதடைந்தது. இதனால் 80 அடி உயரத்தில் இருந்தவர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர்.அந்தரத்தில் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது இதில் ...
ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில், சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் மாவட்ட ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா,போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கோட்டூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் காவல்துறையினர் ...
32 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி நிலத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இடித்து நிலத்தை மீட்டனர். கோவை மாநகராட்சி சரவணம்பட்டி மீனாட்சி நகரில், நகர ஊரமைப்பு துறை ஒப்புதலோடு வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டது. இதில் பொது பயன்பாட்டு இடத்திற்காக ஒதுக்கப்பட்ட 13 சென்ட் இடத்தை, சிவஞானம் என்பவர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டி இருந்தார்.இவர் தி.மு.க பிரமுகர் என்பதால்,அதிகாரிகள் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் ஷேக் ஜாவித் (வயது37) இவர்கடந்த 14-ம் தேதிவீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகப்பட்டினம் சென்றுள்ளார். இந்நிலையில் 16 -ந் தேதி வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் 1 லேப்டாப் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி ...
தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டம் பொறுத்தவரை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு விராசாத் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ...













