காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் அபாயங்கள் உருவாகியுள்ள நிலையில், இரு நாடுகளும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, இந்தியா தரப்பிலிருந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ...
சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கத்தில் குஜராத் மாநிலம் நிறுவிய தினம் கொண்டாடப்பட்டது,. குஜராத் சமாஜ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ‘குஜராத் ஒரு சிறந்த மாநிலம். அங்கு அதிக அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளனர். சர்தார் வல்லபாய் பட்டேல், ...
கொடைக்கானல் அருகே சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரம்மாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடைக்கானல் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நேற்று சென்னையிலிருந்து விமானம் ...
மும்பையில் நடைபெற்று வரும் WAVES மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில், “பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார்; எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர். மோடியின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார். ...
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் இந்திய கொள்கை மற்றும் பொருளாதார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களிடம் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அமெரிக்காவின் அரிசோனா பல்கைலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு உலகளாவிய அறிவை உங்களால் பெற முடியும். படிக்கும் காலத்தில் நாம் அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கான வாழ்க்கைக்கு ...
சென்னையின் சில பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக எழுந்த புகார் தெரிவித்த பத்திரிகையாளரிடம் சென்னை மேயர் பிரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சென்னை மாநகராட்சியில் சமீப நாட்களாக ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ...
புதுடெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை (மே 2) அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவான காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது மற்றும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இந்த மழை டெல்லியில் நிலவிய கோடை வெப்பத்தின் தாக்கத்தை நீக்கியுள்ளது. இருப்பினும் மழையால் ...
எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதன் பின்னணியில் எல்லை ...
சீனா முழுவதும் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. பொருளாதார மந்தநிலையின் மத்தியில், சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் அதிக வரிகளால் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவதையே இது பிரதிபலிக்கிறது என்று ரேடியோ ஃப்ரீ ஆசியா (RFA) செய்தி வெளியிட்டுள்ளது. ஹுனான் மாகாணத்தில் உள்ள டாவோ கவுண்டியில் ...
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், பந்தயம் ஒன்றில் கலந்துகொண்டு, தண்ணீர் கலக்காமல் ஐந்து மது பாட்டில்களை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புஜாரஹல்லா கிராமத்தை சேர்ந்த கார்த்திக், தனது நண்பர் வெங்கட ரெட்டியிடம் 5 மதுபாட்டில்களை முழுமையாக குடிக்க ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டியுள்ளார். பின்னர் தண்ணீர் ...













