கோவையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது. இந்த கன மழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் விழிப்புடன், 24 மணி நேரமும் கண்காணிப்புடன் செயல்பட ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குமாரபாளையம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் ( வயது 36) விவசாயி. இவர் நேற்று தனது மகன்கள் ஆதிரன் ( வயது 7) பிரகதீஷ் ( வயது 6) ஆகியோருடன் பைக்கில் சேலம் – கொச்சி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜல்லிக்கட்டு மைதானம் அருகே சென்றபோது ...

கோவை புதூர் பிரஸ் , என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 62) இவர் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று சேகரும், அவரது மனைவியும் மகளை வெளிநாடு அனுப்புவதற்காக கோவை விமான நிலையம் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் ...

கோவையில் இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் பார்களில் கள்ளசந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மதுபாட்டில்களை பூமிக்கு அடியில் பதுக்கி வைத்து விற்பனை ...

கோவை மதுக்கரை அருகில் உள்ள எட்டிமடை, கம்பர் வீதியை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் அரவிந்தராஜ் ( வயது 28 ) இவர் காந்திபுரம் – வேலாந்தவளம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குனியமுத்தூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் ...

கோவையில் உள்ள சாமி ஐயர் புது வீதி, கே.சி . தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஞ்சிபுரம் புவனேஸ்வரி ( வயது 24) சாம ஐயர் புதுவீதி மரியா (வயது 31) ...

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவர்கள் 2 பேரும் ,15 வயது மாணவர்கள் 2 பேரும் நேற்று முன் தினம் திடீரென்று மாயமாகிவிட்டனர். விசாரணையில் இவர்கள் சரிவர படிக்காததை பெற்றோர்கள் கண்டித்ததால் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ...

கோவை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 – 20 மணிக்கு சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது. அப்போது ​​​​கேபின் குழுவினர் அடையாளம் தெரியாத ஒரு நபர் விட்டுச் சென்ற துண்டு காகிதத்தை கண்டுபிடித்தனர். அந்த நபர் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததாவது:- “My name Mohammed Atta, Unscheduled last ...

கோவையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. சில பகுதிகளில் லேசாக மழை பெய்தது . பிற்பகல் மாலை ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நாராயணசாமி நகரை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரின் மகன் ரிஷி ( வயது 26) இவர் விவசாயத்துக்கு தேவையான நவீன கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் .மேலும் அவர் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தேவையான டிரோன் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டார். இதை தொடர்ந்து அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் முரளி ...