கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று கொடிசியா ” இஸ்கான் ” கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 200 கிராம் கஞ்சா, 38 போதை மாத்திரைகள் ,10 ஏர் டைட் கவர் ...
கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் .இவரது மனைவி மோகனாம்பாள் (வயது 45)இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ...
புதுடெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரியானாவில், 90 சட்ட பேரவை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த அக். 5ல் நடந்தது. 48 தொகுதிகளில் வென்று, பா.ஜ ஆட்சியை தக்க வைத்தது. இந்த தேர்தலில் எண்ணற்ற முறைகேடுகளை பா.ஜ அரங்கேற்றி உள்ளதாக குற்றம் ...
தமிழ்நாடு அரசு முன்பை விட இப்பொழுது பத்திர பதிவிற்கான கட்டணங்களை பெரும் அளவு உயர்த்தி இருக்கிறது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பத்திர பதிவுத்துறையில் 20 வகையான பதிவு தாள்களின் கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண செட்டில்மெண்ட் மற்றும் வாடகை ஒப்பந்தங்களுக்காக 20 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் முத்திரை பத்திரம் இனி செல்லாது எனவும், ...
திருப்பூரில் அணிபவரின் உடலின் வெப்பத்தைக் கண்டறியும் வகையில் புதிய டீ-சா்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் அம்மாபாளையம் பகுதியில் சென்சியா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற ஆடை தயாரிப்பு நிறுவனத்தை சொக்கலிங்கம் என்பவா் நடத்தி வருகிறாா். இவரின் புதிய கண்டுபிடிப்பான உணா்திறன் மை பதிக்கப்பட்ட டி-சா்ட் அணிபவா்களின் உடல் வெப்பநிலையை பாா்வைக்குக் குறிக்கும் ஆடை தயாரித்து அசத்தி உள்ளாா்.இத்தகைய ...
பண்டிகைக் காலத்தின் காரணமாக, அக்டோபர் 2024 இல் ஜிஎஸ்டி வசூலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1,87,346 கோடியாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடியை விட 8.9 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் 2024ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. ...
சென்னை: “ஆயிரம் இருந்தாலும் விஜய் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” என 2 வாரங்களுக்கு முன்பு பேசிய சீமான், தற்போது, “எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.” என ஆவேசமாகப் பேசியுள்ளார். விஜய் vs சீமான் ...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய ...
கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி கோமங்கலம். நல்லாம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாககோமங்கலம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போதுசேவல் சண்டை நடத்தி சூதாடியதாக திப்பம்பட்டி கார்த்தி ( வயது 31) மற்றொரு கார்த்திக் (வயது 30) சந்திரசேகர் (வயது42) கந்தசாமி (வயது ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் அந்த சிறுமி புத்தாடை அணிந்து வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாள். அப்போது கண்ணம் பாளையம் ,காமராஜ் நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் வடிவேல் ...













