கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக அருகே இ சர்வீஸ் மையம் நடத்தி வருபவர் ஈஸ்வரன் இவரது மனைவி சூர்யா( வயது 37 )நேற்று இவரது இ-சேவை மையத்துக்கு கணபதி, நல்லாம்பாளையம் ரோடு ,ரங்கா லே அவுட்டை சேர்ந்த வாசுதேவன் (வயது 66 )என்பவர் உரிமம் புதுப்பிப்பதற்காக வந்திருந்தார். அவரிடம் சூர்யா 1600 ரூபாய் ...
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நோயாளிகள் நல சங்கத்திற்கு வால்பாறை திமுக நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மாதந்தோறும் ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாயை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நித்யாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ...
கோவை குனியமுத்துரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 55) இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது ...
கோவை உக்கடம் கோட்டைமேடு, வென்னல் நாயுடு, 2-வது வீதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். இவரது மகன் விஷ்ணு ராஜ் ( வயது 15) அதே வீதியைச் சேர்ந்தவர்செய்யது இப்ராஹிம்.இவரது மகன் முகசின் அலி ( வயது 16 ) இவர்கள் இருவரும் கடந்த 8 – ந்தேதி கேட்டரிங் வேலைக்கு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ ...
கோவை சரவணம்பட்டி, தபால் நிலையம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர்அருண்குமார் ஆகியோர் நேற்றிரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மதுரை உசிலம்பட்டி பேரையூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது 35 )தாராபுரம், ...
கோவை அருகே வையம்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில்தணிக்கை செய்தபோது மொத்தம் ரூ 40 லட்சத்து 52 ஆயிரத்து 105 கையாடல் செய்யப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி, முதுநிலை முன்னாள் எழுத்தர் தனலட்சுமி, முன்னாள் எழுத்தர் பேச்சியண்ணன், உதவியாளர் மகேந்திரன் ஆகியோர் மீது வணிக குற்றப்புலனாய்வு போலீசார் ...
கோவை கிணத்துக்கடவு போலீசார் நேற்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில்நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை பதுக்கி வைத்திருந்த ஜெயராஜ் மகன் ஜோதி பொன்னு லிங்கம் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான ஶ்ரீ இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் ...
“அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தின்கீழ் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற 2.0 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1, 2024க்குப் பிறகு சொத்தை வாங்க, கட்ட அல்லது மறுவிற்பனை செய்ய நீங்கள் வீட்டுக் கடனைப் பெற்றிருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் வீட்டுக் கடனில் 4 ...
ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தங்கள் எம்எல்ஏக்களை சட்டசபை கேமராக்களில் காண்பிக்கவில்லை என நேற்று அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ‘ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?’ என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...













