பொங்கல் விழா தொடர்பான கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம், குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா தளங்களுக்கு செல்வது, ஜல்லிக்கட்டு போட்டி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் என மாநிலம் முழுவதும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்நேற்று திருவள்ளுவர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் தலைவர்கள் ...

காசின்டி: உகாண்டா நாட்டின் எல்லையில் உள்ள கிழக்கு காங்கோ பகுதியில் காசின்டி நகரில் உள்ள பெந்தகோஸ்தே தேவாலயத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொதுமக்கள் நேற்று முன்தினம் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்த போது, வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தகவல் அறிந்து வந்த ...

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரவிந்தராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார் அதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூர் என்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ...

புதுடெல்லி: பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களுடன் ...

பீகார் சென்றுள்ள எம்.வி. கங்கா விலாஸ் சுற்றுலா கப்பல், ஆற்றில் நிலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கரை திரும்ப முடியாமல் நங்கூரமிடப்பட்டது. தொடர்ந்து சிறு மோட்டார் படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சாப்ரா(பீகார்): உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் இருந்து வங்கதேசம் டாக்கா வழியாக அசாம் மாநிலம் திப்ருகரை 51 நாட்களில் சென்றடையும் எம்.வி.கங்கா ...

கோவை: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சமீர் அலி (வயது 26) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவை காந்திபுரம் சத்திரோடு- 100 ரோடு சந்திப்பதில் உள்ள ஒரு பேக்கரி முன் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் ...

கோவை கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள ஒரு பழக்கடைக்கு முன் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அந்த பகுதி வி.ஏ.ஓ .செல்வராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...

கோவையில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கலை யொட்டி கால்நடைகளை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பூஜை செய்து வணங்கினர். மேலும் காந்தி பார்க் அருகில் உள்ள கோவிலுக்கு கால்நடைகளை அழைத்து வந்து பூஜை செய்தனர். இதனை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிதனர். இன்று ...

கோவை: முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முறைகேடுகளை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர் குழுவினர் அவ்வப்போது ரயில்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் ...

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து ...