கோவை சிங்காநல்லூர் கள்ளிமடையைச் சேர்ந்தவர் பாபு எட்வர்ட் விக்டர். இவரது மகன் பிளக்ஸ் மேத்யூ (வயது 22) இவர் நேற்று முன்தினம் இரவில் சுங்கம் பைபாஸ் ரோடு பாரி நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் இல்லை ...
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 28) இவர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து வடவள்ளியை சேர்ந்த கமலக்கண்ணன் ( வயது 30 ) உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கமலக்கண்ணனுக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கையெழுத்து போட ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல் (வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் வேலை வாங்கி கொடுப்பது போலவும் , ஆன்லைன் மூலமும் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்தாராம். சித்திரவேலின் மோசடி குறித்து டெல்லியில் ...
நாடு முழுவதும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவன் சரணடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சில மாநிலங்களில் ஆயுதமேந்திய போராட்டக்குழுவான மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், மாவோயிஸ்டுகளை அடக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா என பல மாநிலங்களில் ...
போபால்: வாகனப் பரிசோதனையின்போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீஸார் சுருட்டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை இரவு சப்-டிவிஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்டிஓபி) பூஜா பாண்டே தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் ரூ.3 ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக விடுமுறை அளித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார்.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணாமலை தனது பதிவில், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக எந்தத் துறை நிர்வாகத்தையும் சரியாக கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே திமுக அரசு ...
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், ...
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் ...
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தயாராகி வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன்படி, “அக்டோபர் 16 முதல் 18ம் தேதிக்குள் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில், வளிமண்டலத்தில் கிழக்குத் திசை காற்று நாளைக்குள் (புதன்கிழமைக்குள்) வீசத் தொடங்கும் எனவும், அதுவே பருவமழையின் தொடக்கத்துக்கான அறிகுறியாகும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ...
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.ஆன்லைன் முன்பதிவில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் அப்பட்டமாக வசூலிக்கப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். தீபாவளி பண்டிகை அக்.20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னையில் படிப்பு மற்றும் பணி நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ...













