ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல… ஆர்.டி.ஐ. சட்டம் பொருந்தாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

ஆதீன மடங்களுக்கு ஆர்.டி.ஐ. சட்டம் பொருந்தாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்றும்,அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க முடியாது என்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனமான சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர்,தமிழகத்தில் உள்ள பழமையான ஆதீன மடங்களில் தங்கள் மடமும் ஒன்று எனவும்.இந்த மடமானது தமிழக அரசிடமிருந்து எந்தவொரு உதவியும்,நிதியும் பெறாமல்,சொந்த நிதியில் மட்டுமே இயங்கும் நிலையில்,ஆதீன மடம் குறித்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர் என்றும்,எனவே,ஆதீன மடங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வராது என உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்றும்,அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.