2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை பிரபலப்படுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இந்தப் பாதயாத்திரை செல்ல இருக்கின்றது. இதனை அண்ணாமலையே தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பாதயாத்திரை தொடக்க விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.