விஜய் வந்தாலும் மகிழ்ச்சி தான்.அவர் தளபதி தானே!ஆண்ட்ரியா

தங்கம் விலையை பார்த்தாலே தற்போது பயமாக இருக்கிறது என கோவையில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது. அதில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று, நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தனக்கு மிகவும் பிடித்த ஊர் கோயம்புத்தூர் என்றும், ஆண்டுக்கு பத்து முறை கோவைக்கு வந்து செல்லும் எனக்கு, கோயம்புத்தூர் வந்தாலே மிகுந்த சந்தோஷம் என்றும் கூறினார்.

தற்போது தங்கம் விலையைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என கூறிய அவர்,நவம்பர் 21ஆம் தேதி தான் நடித்த மாஸ்க் திரைப்படம் வெளியாக உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது. ஜாலியான படம் என்பதால் அனைவரும் திரையரங்கில் வந்து படத்தை பாருங்கள் என வலியுறுத்தினார்.தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு. நடிகர் விஜய் வந்தாலும் மகிழ்ச்சி தான் என்றும். அவர் தளபதி தானே என பதிலளித்தார்.தொடர்ந்து கடைக்கு வெளியே ரசிகர்களை சந்தித்த பேசிய ஆண்ட்ரியா பின்னர் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.