டாஸ்மாக் அமைக்கும் விதிகளில் திருத்தம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.!

டாஸ்மாக் சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட்ட உள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு, திறந்த கடையை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு அல்லது கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால், அதை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்யும் வகையில், மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

டாஸ்மார்க் கடைகள் எங்களது கிராமத்தில் வேண்டாம் என்று, கிராம பஞ்சாயத்துகள், கிராம சபை தீர்மானம் நிறைவேற்றினால், அதை செயல்படுத்துவது தொடர்பாக இருவேறு உத்தரவுகளை உயர்நீதிமன்றம் வழங்கியது.

இதனால் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அவரிவில் இந்த வழக்கு விசாரணை நடைபெறு வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், “டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில், மதுபான சில்லரை விற்பனை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளோம்” என்று தமிழக அரசு தரப்பில் அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தில், பொதுமக்களின் ஆட்சேபங்களை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும், அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் முடிவை எதிர்த்து 30 நாட்கள் மேல்முறையீடு செய்யவும் விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை மீண்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.