டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனது வணிகத்தை விரிவு செய்வதற்காக பிரான்சின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 470 புதிய விமானங்களை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்களாகன் (6.40 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வுளவு விமானங்கள் கொள்முதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன்படி ஏர்பஸ் A350 பிரிவில் 40 விமானங்களும், போயிங் 787 பிரிவில் 20 விமானங்களும், போயிங் 777-9s பிரிவில் 10 விமானங்களும், 210 ஏர்பஸ் A320/321 நியோஸ் மற்றும் 190 போயிங் 737 மேக்ஸ் ரோல்-ஆல் இயங்கும் ஏ350 விமானங்கள் உள்ளன என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, புதிய விமானங்களில் 2023 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் விமான சேவையில் நுழையும் என்றும் பெரும்பாலான விமானங்கள் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுவனத்துடன் இணையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என் சந்திரசேகரன் கூறுகையில், விமான நிறுவனம் பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவை, தொழில்நுட்பம், பொறியியல், நெட்வொர்க் மற்றும் மனித வளம் ஆகியவற்றில் ஒரு பெரிய மாற்றப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
“இந்த ஆர்டர் ஏர் இந்தியாவின் லட்சியத்தை நனவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும், அதன் Vihaan.AI மாற்றும் திட்டத்தில், இந்திய இதயத்துடன் உலகப் பயணிகளுக்கு சேவை செய்யும் உலகத் தரம் வாய்ந்த முன்மொழிவை வழங்குகிறது. இந்த புதிய விமானங்கள் விமானத்தின் கடற்படை மற்றும் உள் தயாரிப்புகளை நவீனமயமாக்கும். அதன் உலகளாவிய நெட்வொர்க்கை வியத்தகு முறையில் விரிவுபடுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் எதிரொலியாக பிரதமர் நரேந்தமோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைப்பேசி வாயிலாக பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிடன் இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை ஆழமடைந்ததில் திருப்தியை வெளிப்படுத்தினர், இது அனைத்து களங்களிலும் வலுவான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பிரகாசமான எடுத்துக்காட்டு என ஏர் இந்தியா மற்றும் போயிங் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தத்தின் அறிவிப்பை அவர்கள் வரவேற்றனர்.
இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விரிவடைகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏர் இந்தியா போயிங் விமானங்களை வாங்குவதற்கான “வரலாற்று ஒப்பந்தத்தை” ஜோ பிடன் பாராட்டினார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முன்னதாக ஏர்பஸ் மற்றும் டாடா சன்ஸ் இடையேயான ஒப்பந்தத்தை பாராட்டி, இந்தியாவிலும் பிரான்சின் மூலோபாய கூட்டாண்மையிலும் இது ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது என தெரிவித்துள்ளார்.
Leave a Reply