அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தான் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று (23.03.2026) நடைபெற்றது. இதற்காகத் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நேற்று காலை 10 மணியளவில் சென்னைக்கு வருகை தந்தார். இதனையடுத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நோக்கில் பியூஷ் கோயல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான ‘எம்.ஜி.ஆர் மாளிகையில்’ அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.