22ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்ட்மிட்டிருந்த நிலையில், இன்று திமுக வெளியிடும் முன் அவசர அவசரமாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீட்டையும் அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மக்களவை தேர்தல் 2024ல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன் அடிப்படையில்,
- வடசென்னை – இராயபுரம் மனோ
- தென் சென்னை – ஜெயவர்தன்
- காஞ்சிபுரம் – ராஜசேகர்
- அரக்கோணம் – விஜயன்
- விழுப்புரம் – பாக்கியராஜ்
- சிதம்பரம் – சந்திரஹாசன்
- நாமக்கல் – தமிழ்மணி
- கரூர் – கே.ஆர்.என். தங்கவேல்
- சேலம் – விக்னேஷ்
- மதுரை – சரவணன்
- தேனி – நாராயணசாமி
- கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
- ஆரணி – கஜேந்திரன்
- நாகப்பட்டிணம் – சுர்ஜித் சங்கர்
- ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
- இராமநாதபுரம் – ஜெயபெருமாள்
உள்ளிட்ட 16 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார்.
மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால் 5 தொகுதிகள் வழங்குவோம் என்றும், கூட்டணியை நம்பி அதிமுக கட்சி இல்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.