ஜாடிக்கு ஏத்த மூடி

கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் (அதிகாரபூர்வ டுவிட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய மத்திய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை ஸ்க்ரிப்ட்டை தற்போது கையிலெடுத்துள்ளது.

சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி…” எனத் தனது பதிவில் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.