அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!!

கோவை: அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்த்து உள்ள 40 தொகுதிகளில், 33 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

கோவை – சிங்கை ராமச்சந்திரன்

திருச்சி – கருப்பையா

பெரம்பலூர் – சந்திரமோகன்

மயிலாடுதுறை – பாபு

ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்

தருமபுரி – அசோகன்

திருப்பூர் – அருணாசலம்

நீலகிரி – லோகேஷ்

வேலூர் – பசுபதி

திருவண்ணாமலை – கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி – குமரகுரு

சிவகங்கை – சேகர் தாஸ்

நெல்லை – சிம்லா முத்துச்சோழன்

புதுச்சேரி – தமிழ்வேந்தன்

தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி

கன்னியாகுமரி – பசிலியா நசரேத்

விளவங்கோடு இடைத்தேர்தல் – ராணி

சிங்கை ராமசந்திரன்; இதில் அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பணியாற்றிய இவர், மார்ச் 2016ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளார்.

இவர் 18 வயதில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாராம். அவர் பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி  தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். 2013 ஆம் ஆண்டு பிஜிடிஎம்   இல் சேர ஐஐஎம் அகமதாபாத்தில் சேர்வதற்கு முன்பு அவர் ஃபோகஸ் அகாடமி ஃபார் கேரியர் மேம்பாட்டிற்காக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியின் வெற்றிக்கு ஐடி பிரிவு பங்களித்தது. அதில் முக்கிய ரோல் இவருடையது. அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவளித்த முதல் கட்சிச் செயலாளர்களில் இவரும் ஒருவர்.

பிப்ரவரி 2017 இல், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அவர் வி.கே.சசிகலாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். வெளிப்படையாக் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவர் நீக்கப்பட்டார். இரு அணிகளும் இணைந்ததையடுத்து, மீண்டும் அதிமுக ஐடி பிரிவு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்து மீண்டும் எடப்பாடி அணியில் செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். முக்கியமாக டாக்டர் மகேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்தது. கடைசியில் கணபதி ராஜ்குமார் தேர்வாகி உள்ளார்.

கோவை முன்னாள் அதிமுக மேயர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் கணபதி ராஜ்குமார் ஆவார். 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகரின் 5வது மேயராக 2011 – 16 வரை அதிமுகவில் இருந்து சேர்ந்த கணபதி பி.ராஜ்குமார் பதவி வகித்து வந்தார். அங்கே அதிமுகவின் டாப் தலைகளில் ஒருவராக இருந்தார்.