ஐடி ஊழியர்களை காலி பண்ணும் ஏஐ..!!

ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையின் எதிர்காலம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார்.கோடிங் அனுபவமே இல்லாத ஒருவர் ஏஐ உதவியுடன் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். மேலும், ஏஐ மாடல்கள் மிகக் கடினமான கோடிங் பணிகளையும் மனிதர்களை விடச் சிறப்பாகச் செய்து முடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நானும் ஒரு கோடிங் எழுதுபவன் தான். ஆனால், இனி வரும் காலங்களில் நாம் வேறு வேலைகளைப் பார்த்துக்கொள்வது நல்லது” என ஸ்ரீதர் வேம்பு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இது ஐடி ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கூகுளின் ‘ஜெமினி’ ஏஐ-யுடன் அவர் நடத்திய உரையாடலில், ஏஐ-யால் உலகம் இரு வழிகளில் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். தொழில்நுட்பம் மனிதனுக்கு உதவியாக அமைந்தால் மகிழ்ச்சி; இல்லையேல் அதிகாரம் ஒரே இடத்தில் குவியும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.