அக்னிபத் திட்டம்: விமானப் படையில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் – கோவை கலெக்டர் சமீரன் அறிவிப்பு..!

கோவை:
அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இருபாலரும் 4 ஆண்டுகளுக்கு வீரராக ஜனவரி 18, 2023 ஆம் ஆண்டு சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டு வருகிறது. நவம்பா் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.