கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 145 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள் இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். தாரணி என்கின்ற மாணவி 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலில் பெற்றுள்ளார். 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் வரலாறு பாடத்தில் மூன்று மாணவிகள் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்கள் இது பற்றி தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் தெரிவிக்கையில் பன்னிரண்டாம் வகுப்பில் 98 சதவீதமும் நில்பர் ஸ்வீட்டி 584 மதிப்பெண்களும் 11-ம் வகுப்பில் 99 சதவீதமும் பத்தாம் வகுப்பில் 100 சதவீதமும் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சிக்காக பள்ளி ஆசிரியர்கள் முழுமையாக பணியாற்றி மாணவிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மாணவியின் கற்றல் திறனை அதிகரித்து போட்டி தேர்வுகள் அதிகம் வைத்து இந்த தேர்ச்சி சதவீதம் பெறப்பட்டிருக்கிறது. மாணவிகளும் மாணவிகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்து படிப்பில் கவனம் செலுத்தியதால் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கையும் கற்றல் திறன் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்தி அனைத்து பொது தேர்வுகளிலும் 100% இலக்காகக் கொண்டு பயணிப்போம் என்று தெரிவித்தார். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பிலும் எஸ் எம் சி உறுப்பினர்கள் சார்பிலும் பள்ளியின் பால் அக்கறை கொண்டுள்ள முன்னாள் மாணவிகள் சூலூர் எஸ் ஆர் எஸ் கல்வி அறக்கட்டளை, பொதுநல அமைப்புகள் சார்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்
21 ஆண்டுக்கு பிறகு சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி
