சூரியனை நெருங்கும் ஆதித்யா எல்-1… சுற்று வட்டப் பாதையை 4வது முறையாக உயர்த்தியது இஸ்ரோ.!!

சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை 4ஆவது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது சூரியனை ஆராயவுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப்பாதை கடந்த 3 ஆம் தேதியும் இரண்டாவது சுற்றுவட்டப்பாதை கடந்த 5ஆம் தேதியும் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டன.

இந்த நிலையில் 3ஆவது முறையாக சுற்று வட்டப்பாதை கடந்த 10ஆம் தேதி அதிகாலை உயர்த்தப்பட்டது.3 கட்டங்களை வெற்றிகரமாக கடந்த ஆதித்யா எல்1 விண்கலத்தின் 4 ஆவது சுற்று வட்டப்பாதையை உயர்த்துவதற்கான கட்டளைகள் பெங்களூரு மற்றும் மொரீசியஸில் இருந்து அனுப்பப்பட்டன.

இந்த புதிய சுற்று வட்டப்பாதை குறைந்தபட்சம் 256 கிலோமீட்டரும்,அதிகபட்சம் 1,21,973 கிலோமீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக புவி வட்டப்பாதையில் இருந்து ட்ரேன்ஸ் லாக்ரகீன் பாயிண்ட் 1புள்ளிக்கு அனுப்பும் இறுதிகட்ட பணிகள் வரும் 19ஆம் தேதி காலை 2 மணிக்கு நடக்கும் என்று இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.