கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், உத்தரவின் பேரில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று பொள்ளாச்சி புதிய பேருந்து நிறுத்தம் அருகில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் மகன் சபரிநாதன் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.. அவரிடமிருந்து 6 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்..
பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் வாலிபர் சிக்கினார்..!
