கோவையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான சிகிச்சை பிரிவுகள் உள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்குள்ள பெண்கள் நரம்பியல் சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை ஒரு வாலிபர் திடீரென புகுந்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த ஊசி மற்றும் மருந்துகளை அவர் திருட முயன்றார். இதை அங்கு பணியில் இருந்த நர்சுகள் பார்த்துவிட்டனர். உடனே அந்த வாலிபரை விரட்டி மடக்கி பிடித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் கோவை ரேஸ் கோர்ஸ் நிலையத்திற்கு இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் .சரவண பிரியா தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பெண்கள் வார்டில் புகுந்து திருடிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் பைசல் ரகுமான் (வயது 26) என்றும் போத்தனூர் அருகே உள்ள குறிச்சி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
பைசல் ரகுமான் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் மற்றும் சோபா ரிப்பேர் செய்து வந்து உள்ளார். மருந்து கடையில் ஊசி மருந்து கேட்டு கொடுக்காததால் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து அவற்றை எடுக்க முயன்றதாக கூறியுள்ளார்.
இதே தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிரந்து 9 சிரஞ்சீகள், நரம்புகளுக்கு போடப்படும் மருந்து பாட்டில் மற்றும் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு பைசல் ரகுமான் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊசி, மருந்துகள் திருடிய வாலிபர் கைது..!
