கோவை மே 3
கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர், காமராஜபுரம் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் கிரி பிரசாத் ( வயது 22 )நேற்று இவர் அங்குள்ள மேட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்கள் நவீன், நிர்மல்ராஜ், லோகேஸ்வரன் ஆகியோருடன்கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிலருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் கிரிக்கெட் மட்டையால் ஹரி பிரசாந்த் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஹரி பிரசாத் போத்தனூர்போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திநகர், மேட்டு தோட்டத்தைச் சேர்ந்த ராம் என்ற ஸ்ரீராம் ( வயது 23) சொட்டு என்ற ஜெயச்சந்திரன் ( வயது 24 ) ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.