கோவை புலியகுளம், பஜார் வீதியைச் சேர்ந்தவர் தனுஷ் லால் ஆரோக்கியராஜ் (வயது 35) இவர் மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவில் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். இரவில் இவரது காரின் மேல் மூடி இருந்த கவரில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் லூர்துமேரி ஆகியோர் இதை பார்த்தனர் .இது குறித்து ஆரோக்கியராஜ்க்கு தகவல் கொடுத்தனர் .அவர் வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தார். இதனால் காரின் மேல் மூடியிருந்த கவர் தீப்பிடித்து சேதம் அடைந்தது. இது குறித்து தனிஸ்லால் ஆரோக்கியராஜ் இராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply