சத்தியமங்கலம் சாலையை வழிமறித்து நின்ற ஒற்றை யானை – போக்குவரத்து பாதிப்பு..!

ரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான இன்ப மலைப்பாதையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் காராப்பள்ளம் சோதனை சாவடி உள்ளது.

தமிழ்நாடு எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனவிலங்குகளை காப்பதற்காக நீதிமன்ற உத்தரவின்படி இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக அன்றாடம் காலை 6 மணி முதல் போக்குவரத்து தொடங்கும், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் அந்த சோதனைசாவடியிலேயே நிறுத்தப்படும்.

இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பல்லடம் செல்வதற்காக மக்காசோளம் ஏற்றி வந்த லாரி சோதனை சாவடி அருகே பழுதாகி நின்றது. இதையடுத்து வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டுயானை லாரியில் இருந்த மக்காசோளத்தை உண்டது.

ஒற்றை யானை சாலையில் நின்றதால் அச்சத்தின் காரணமாக எந்த வாகனமும் செல்லாமல் வரிசையாக நிறுத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரு மாநிலங்களிலிருந்தும் வந்த கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.