நள்ளிரவில் கேட்டுகளை திருடும் மர்ம கும்பல்… இரும்பு கடையில் விற்கும் போது போலீசிடம் வசமாக சிக்கிய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.!!

கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டி பகுதியில் அருகம்பாளையம், மாதப்பூர் பகுதிகளில் தோட்டம் மற்றும் வீடு ஆகியவற்றில் கேட்டுகளை (Gate) திருடிய கும்பலைச் சேர்ந்த கொள்ளு பாளையம் குமார் மற்றும் மகேந்திரன் இரண்டு பேர் பிடிபட்டனர்.

திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பிடித்தனர். இவர்கள் தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அண்ணாச்சி பழைய இரும்பு கடையில் கேட்டுகளை விற்றது தெரியவந்து. அந்த கேட்டுகளையும் அங்கிருந்து மீட்டெடுத்தனர். அதோடு மட்டுமல்லாமல் கருமத்தம்பட்டி விளம்பரப் பலகை விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்தும் கூட இரும்பு சட்டங்களை இந்த கும்பல் திருடி உள்ளது.

இதுகுறித்து சி.பி செந்தில் குமார் கூறும் போது :-

பொது மக்கள் சிறுக, சிறுக கஷ்டப்பட்டு சேர்க்கும் பொருள்களை நள்ளிரவில் திட்டமிட்டு திருடும் கும்பலையும் திருட்டுப் பொருட்களை வாங்கும் கும்பலையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கடந்த நான்கு நாட்களாக மிகவும் சிரமப்பட்டு கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் போலீசாருடன் இணைந்து இந்தத் திருடர்களை பிடித்ததாக கூறினார். பொருட்களை மீட்ட செந்தில் குமாருக்கு இப்பகுதி மக்கள் பாராட்டினை தெரிவித்தனர்.