கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 5 வது வீதியில் உள்ள ஒரு துணி கடை முன் நேற்று ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை கணபதி மேற்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பிரபு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வழியில் அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த சக்திதரன் (வயது 43) என்பது தெரிய வந்தது. அவர் எப்படி செத்தார்? என்று தெரியவில்லை.இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply