கோவையில் ஓடும் ரெயிலில் இருந்துதவறிவிழுந்தவரை காப்பாற்றிய காவலர்கள். கோவை செப் 23 கோவை ரெயில்நிலையத்தில் உள்ள 3 -வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு கோவை இருப்பு பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ் காவலர் மாரிமுத்து மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் ரோந்துபணியில் இருந்தனர். அப்போது கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயிலில் பயணம் செய்த சேலம்,மேட்டூர் அணை, பிட்டர்மேன் குடியிருப்பை சேர்ந்தசிவகுமார் என்பவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கும்போது கால் தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார். இதை பார்த்த காவலர்கள் தன் உயிரை துச்சமாக மதித்து மேற்படி நபரை காப்பாற்றி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களின் வீர – தீர ச்செயலைஅதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினார்கள்.
Leave a Reply