கோவை விமான நிலையத்தில் 524 கார்கள் நிறுத்தும் நவீன கார் பார்க்கிங்.

கோவை மே 2 கோவை விமான நிலையத்திலிருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும் , 1000வெளிநாட்டு பயணிகளும், பயணம் செய்கிறார்கள். விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் கோடியில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது ஓடுதளம் 2,900 மீட்டராக உள்ளது. இதனை மேலும் 450 மீட்டர் நீளத்துக்கு நீட்டிக்கவும் பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் 2031 – ம் ஆண்டுக்குள் முடிவடையும்.தற்போது உள்ள பழைய குடியிருப்பு பகுதியை அகற்றி அங்கு கார் பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது. மொத்தமாக 524 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் மையம் அமைக்க விமான நிலைய ஆணையரகம் ஒப்பந்தம் கோரி உள்ளது .இந்த பணிகள் முடிவடைந்ததும் தற்போதுள்ள பார்க்கிங் இடத்தில் சில மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.