கோவை மே 7
கோவை அருகே உள்ள இருகூர் பொன்னூரஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44. )கட்டுமான துறை ஊழியர். இவரது மனைவி சந்தானவல்லி (வயது 39) மணிகண்டன் குடிப்பழக்கம் உடையவர் .அவர் கடந்த சில மாதங்களாக 4 முறை விஷம் குடித்து தற்கொலைசெய்ய முயன்றார். அக்கம் பக்கத்தில்உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மணிகண்டன் சாணி பவுடரை குடித்துவிட்டு படுத்து விட்டார். வெளியே சென்றிருந்த மனைவி சந்தானவள்ளி வந்து பார்த்ததும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த கணவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மணிகண்டன் இறந்தார். 4 முறை தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த மணிகண்டன் 5-வது முறை விஷம் குடித்ததில் உயிரிழந்தார்.இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.