கோவை மே 17 கோவை பீளமேடு, வி.கே. ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் வரதராஜன் . இவரது மகன் சபரி (வயது 37) இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் ,ஜாதக பொருத்தம் சரியில்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் மனமுடைந்த சபரி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் வேட்டியை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களது சொந்த ஊர் சேலம் மாவட்டம் குட்டப்பட்டி பக்கம் உள்ள குப்பனூர் ஆகும்.இது குறித்து இவரது தந்தை வரதராஜன் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
திருமண ஏக்கத்தில்தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை .
