கோவை மே 10 கோவை செல்வபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர்திருமுருகன் (வயது 47 )நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி ( வயது 40) இவர்களுடைய மகள் ஜனனி (வயது 17) பிளஸ் 2மாணவி. திருமுருகன் நகைக்கடைகளில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி பட்டறைகளில் கொடுத்து நகையாக மாற்றி மீண்டும் நகை கடைகளில் கொடுத்து வந்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன் தினம் வெளியானது . ஜனனி 506மார்க் பெற்று இருந்தார். அந்த மகிழ்ச்சிகரமான தகவலை அவர் தனதுபெற்றோரிடமும், உறவினருடனும் பகிர்ந்து கொண்டார். நகை வியாபாரம் செய்து வந்த திருமுருகனுக்கு பல லட்ச ரூபாய் கடன் இருந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர்..இந்தக் கடனிலிருந்து நம்மால் மீள முடியாது எனவே நாம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுமனைவியுடன் கூறினார். பிளஸ் 2 தேர்வில் மகள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதால் அவளை கொல்ல 2 பேருக்கும் மனம் வரவில்லை. இதை யடுத்து அவர்கள் தங்களின் மகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் திருமுருகன் தனது மனைவி மற்றும் மகளுடன் பேரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் அவர் தனது மகளிடம் நீ இரவு வரை இங்கு இருந்து கொள் அம்மாவுக்கும், எனக்கும் வெளியில் கொஞ்சம் வேலை உள்ளது .இரவில் வந்து உன்னை அழைத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு திருமுருகன் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு நண்பரின் கடைக்கு சென்று சயனைடு வாங்கினார். அங்குள்ள ஒரு கடைக்கு சென்று குளிர் பானம் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார் அவர்கள் 2பேரும் வீட்டில் படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர். பின்னர் குளிர்பானத்தில் சயனைடு கலந்து குடித்தனர்.சில நிமிடங்களில்அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இரவு 9 மணிக்கு மேல் ஆகியும் தன்னை அழைக்க வராததால் ஜனனி தனது பெற்றோர் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டும் அவர்கள் போன் எடுத்து பேசாதால் தனது உறவினருக்கு தகவல் கொடுத்தார்.அந்த உறவினர் திருமுருகன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது முன் பக்க கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தவுடன் படுக்கையறையில் கதவு பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம்பக்கம்உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு திருமுருகன், பிரதீபா ராணி ஆகியோர் வாயில் நுரை தள்ளியவாறு பிணமாக கிடந்தனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனை காரணமாக தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருமுருகன் பிரதீபா ராணி தற்கொலை செய்து கொண்ட அறையில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கடவுளே நீங்கள் தான் எப்போதும் எங்களுக்கு துணையாக இருந்து உள்ளீர்கள் .அதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி. எங்களுக்கு இந்த உலகத்தில் தன்மானம் மரியாதையுடன் வாழ ஆசை. அவமானத்துடன் வாழ விருப்பமில்லை. எங்களுக்கு பாசமான மகளை கொடுத்து இருக்கிறீர். அதற்கு உமக்கு மிகுந்த நன்றி. பாசம் உள்ள மகளை இப்போது எங்களுடன் அழைத்து செல்ல விருப்பமில்லை. அவள் வாழக்கூடியவள். அவளை நீங்கள் தான் ( கடவுள்) பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு பாசம் காட்ட நாங்கள் இருக்க மாட்டோம் என்பதால் நீங்கள் தான்அவளுக்கு வாழ்நாள் முழுவதும் துணையாகஇருக்க வேண்டும். நான் யாருக்குஎல்லாம் பணம் கொடுக்க வேண்டுமோ? அவற்றையெல்லாம் கொடுத்துவிடு. கடவுள் என்பதால் நான் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற விவரம் உங்களுக்கு தெரியும். அதை கொடுத்துவிடு நாங்கள் 2 பேரும் உங்களிடம் வந்து சேர்ந்து விடுவோம். உங்களிடம் வந்து சேர்ந்த பின்னர் எங்களை பற்றி யாரும் எவ்வித அவதூறும் பேசக்கூடாது. அதற்கு இறைவா நீ தான் அருள் புரிய வேண்டும் .இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.
கடன் தொல்லையால் மனைவியுடன் நகை வியாபாரி தற்கொலை .நெஞ்சை உருக்கும் கடிதம் சிக்கியது.
