கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் தங்கச் செயின் திருட்டு.

கோவை மே 3 கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம், சக்தி நகர் சேர்ந்தவர் மருதாச்சலம் .இவரது மனைவி சுதாலட்சுமி ( வயது 48) இவர் நேற்று அத்திப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கோவிலில்சாமி கும்பிட்டு விட்டுஸ்ரீவாரி கார்டன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்று விட்டார் .இது குறித்து சுதாலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.