கோவை மே 2 பாலக்காட்டைச் சேர்ந்த வர் 17 வயதில் சிறுமி .இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோவையில்உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட ரயில் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் கோவை நிலையத்தை விட்டு வெளியே வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். முதலில் சாப்பிட்டு முடித்த அந்த சிறுமி ஓட்டலை விட்டு வெளியே வந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடிரென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார் .உடனே அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இது குறித்துகாட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகார்செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் ரயில் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்வதும் அவர் கூச்சலிட்டதும் தப்பி ஓடியதும் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கோவைஅருகே உள்ள வேடப்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் சந்தோஷ் (வயது 29) என்பது தெரியவந்தது .உடனே போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவைக்குசுற்றுலா வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.கார் டிரைவர் போக்சோவில் கைது.
