போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகனத்தின் புகைப்படத்தை “லிங்க் ” அனுப்பி பணம் பறிக்கும்மோசடிகும்பல்.சைபர் கிரைம்போலீசார் எச்சரிக்கை.

Cybercrime.

கோவை மே 10 தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதை பயன்படுத்தி மற்றொருபுறம் விதவிதமான மோசடியும் அரங்கேறி வருகிறது. வங்கியில் இருந்து பேசுகிறோம் மானியத்தில் கடன் வாங்கித் தருகிறோம். சி.பி.ஐ .அதிகாரி என்று கூறி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்று வந்தன. அதில் தற்போது புது விதமாக ஒரு மோசடி அரங்கேறி உள்ளது. அதாவது போக்குவரத்து விதிகளை மீறியதாக நமது செல்போனுக்கு புகைப்படத்துடன் லிங்கை மரம ஆ சாமிகள் அனுப்புகின்றனர். அதில் ஏதோ நாம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக போலீசார் அனுப்பிய புகைப்படம் என்று கருதி அந்த லிங்கில் அபராத தொகையை செலுத்தும் நோக்கில் விவரங்களை பதிவு செய்யும் நபரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் அபகரித்து விடுகின்றனர்..இதுகுறித்துகோவை சைபர் கிரைம்போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் கூறியதாவது :-குற்ற செயல்களை தடுக்க சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன .அதில் விதிகளை மீறும் வாகனங்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியும் போலீசாரால் அனுப்பப்படும். அதில் எந்த பகுதியில் போக்குவரத்துவிதிமுறைகள் மீறப்பட்டது? என்ற புகைப்படம் இருக்கும். அபராத தொகை எவ்வளவு? என்பதையும் எம். பரிவாகன் என்ற செயலிக்குள் சென்று வாகனத்தின் எண்ணை பதிவு செய்தால் தெரிந்து விடும் .இதேபோன்று போக்குவரத்து விதிகளை மீறியதாக புகைப்படத்துடன் லிங்க் அனுப்பி மர்ம ஆசாமிகள் புதுவிதமான மோசடி செய்து பணத்தை பறிக்கின்றனர். அதாவது போக்குவரத்து விதியை மீறியதாக புகைப்படம் ,அபராத தொகை அதை செலுத்த லிங்குடன் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வரும். அதை பார்க்கும் நபர் நாம் தான் போக்குவரத்து விதியை மீறி இருக்கிறோம். என்று நினைத்து அந்த லிங்க்குள் சென்று அபராததொகையை செலுத்த முயற்சி செய்தால் ஆதார் எண், பான் கார்டு எண் ,வங்கிக் கணக்கு எண், உள்ளிட்ட விவரங்களை கேட்கும் அதை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கு எண் ஆதார் மற்றும் பான்கார்டுகள் உடனடியாக மோசடி ஆசாமிகளுக்கு கிடைத்துவிடும். அதை வைத்து சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடிஆசாமிகள் அபகரித்து விடுவார்கள். பொதுவாக போலீசார் அனுப்பும் தகவலில் எந்த லிங்க்கும் இருக்காது எம். பரிவாகன் செயலி மூலமோ அல்லது போலீசாரின் வெப்சைட் மூலமாக தான் அபராதத்தை செலுத்த முடியும். ஆனால் இந்த மர்ம கும்ப கும்பல் அனுப்பும் குறுஞ்செய்தியில் லிங்க் இருக்கும் அதை திறந்து விவரங்களை பதிவு செய்யக்கூடாது. மீறி அந்த லிங்கை தொட்டு தகவல்களை பதிவு செய்தால் பணத்தை இழந்து விடும் அபாயம் ஏற்படும் .அந்த வகையில் கோவையை சேர்ந்த ஒருவரிடம் மர்ம ஆசாமிகள் ரூ.50 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். மேலும் 5 பேரிடமும் மோசடி நடந்துள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை மீறியதாக செல்போனுக்கு புகைப்படத்துடன் லிங்க் வந்தால் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் புகைப்படம் மோசடி ஆசாமிகளுக்குஎப்படி கிடைக்கிறது? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.