கோவையில் எம்.ஏ.படித்த கல்லூரி மாணவி எங்கோ மாயம்..!!

கோவை :கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் ,விவசாயி. இவரது மகள் யுவஸ்ரீ ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் எம். ஏ ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் இவரது படிப்பு முடிந்தது.இந்த நிலையில் ஊருக்கு புறப்பட்டு வருமாறு சண்முகம் மகள் யுவஸ்ரீயிடம் கூறினார்.அவர் சரி என்று கூறிவிட்டு எங்கோ மாயமாகி விட்டார்.அவரது தாயாரிடம் போன் செய்து பஸ்சில் பெங்களூர் சென்று கொண்டிருப்பதாக கூறினாராம்.இதுகுறித்து சண்முகம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.