கோவை மே 28 கேரள மாநிலம்திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் ( வயது 26) இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் .இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து நேற்று காலை கோவையிலிருந்து விமான மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் டேராடூன் செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் நேற்று காலையில் கோவை விமான நிலையம் வந்தார் .விமான நிலையத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் நவீன “ஸ்கேன் ” கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது பிரதீப் குமாரின் பையில் துப்பாக்கி இல்லாமல் தோட்டம் மட்டும் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பேக்கை சோதனை செய்து அதில் இருந்த தோட்டாவை வெளியே எடுத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர் அப்போது பிரதீப் குமார் தான் டேராடூனில் மத்திய பாதுகாப்பு படையில் கடந்த 20 22 ஆம் ஆண்டு முதல் ஏட்டாக வேலை பார்த்து வருவதாகவும், விடுமுறையில் கேரளா வந்துவிட்டு பெங்களூர் செல்ல உள்ளதாகவும் தனது பேக்கில் தோட்டா எப்படி வந்தது? என்று தனக்கு தெரியாது என்றும், பணியின் போது அருகில் இருந்த பையில் தோட்டா தவறி விழுந்திருக்கலாம் அதை கவனிக்காமல் கொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ளார் .இதை யடுத்து அவரது பேக்கில் இருந்து தோட்டாவை பறிமுதல் செய்து அவரை பீளமேடு போலீசில்ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கந்தசாமி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார் .இதை யடுத்து டேராடூனில் உள்ள உயர் ராணுவ அதிகாரிகளிடம் விசாரித்த போது பிரதீப் குமார் அங்கு பணியாற்றுவது உறுதியானது. இதனால் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர் .கோவை விமான நிலையத்தில் ராணுவ வீரரிடம் தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை விமான நிலையத்தில் ராணுவ வீரரிடம் தோட்டா சிக்கியது.காவல் நிலையத்தில் விசாரணை.
